Advertisment

கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிட எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை! 

கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க முன்னாள் தலைவர் கலைஞரின் 2-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, நினைவு அஞ்சலி செலுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும் என கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 2-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 07.08.2020 அன்று காலை கடலூர் கிழக்கு மாவட்டத்திலுள்ள ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு வாரியாக கிளைகள் தோறும் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்தும், நினைவு அஞ்சலி செலுத்தியும், கலைஞரின் சாதனைகளை பதாதைகள் ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஏழை எளியோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும்.

Advertisment

மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு கோவிட் முன்கள பணியாளர் ஒருவரை அடையாளம் கண்டு (மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அத்தியாவசியப் பொருட்களை வழங்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் பேன்றவர்கள்) அவர்களுக்கு அழைப்பு விடுத்திட வேண்டும்.

மேலும் ஆதரவற்றோர்இல்லம், முதியோர் இல்லம், மருத்துவமனைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகள் மற்றும் இதர ஆதரவு இல்லாதோர் அமைப்புகளுக்கு சென்று நிவாரண உதவிகள் அளித்திட வேண்டும்.

இந்நிகழ்ச்சிகளை அந்தந்த பகுதிகளிலுள்ள, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளை சமூக இடைவெளியுடன் நடத்தி, இந்நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், வீடியோக்களை அனைத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து 9171091710 என்ற வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பி வைக்கவும். மேலும் புகைப்படங்களின் தொகுப்பினை மாவட்ட கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

kalaignar mrkpanneerchelvam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe