Skip to main content

9 ஆண்டுகள் கழித்து அரசு பள்ளியில் கலைஞர் இலவச டிவி!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020
kalaignar tv

 

தமிழகத்தில் திமுக ஆட்சியில் 2006 -2011 ம் ஆண்டு வீடு தோறும் இலவச கலர் டிவி வழங்கினார். 2011 ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மீதம் இருந்த டிவிக்களை அரசு மருத்துமனை மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சியில் மீதம் உள்ள கலர் டிவிகளை பள்ளிகளுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளனர். திருச்சி மேற்கு தொகுதியில் இருந்த குடோனில் இருந்து திருச்சியில் உள்ள 77 அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர்களை வரழைத்து கொடுத்தனர். இதில் பல டிவிகளின் அட்டை பெட்டிகள் கிழிந்து இருந்தது. 9 ஆண்டுகள் கழித்து பள்ளிகளுக்கு ஏன் கொடுக்க வேண்டும். அவை தற்போது நல்லமுறையில் இயங்குமா? என்கிற கேள்வி எழுகிறது.  

அதே நேரத்தில் பள்ளியில் மாணவர்கள் பார்பதற்கோ அல்லது பாடங்கள் எடுப்பதற்கோ இந்த டிவிகளை பயன்படுத்த முடியாது. அங்கு பெரிய அளவில் உள்ள எல்ஈடி டிவிக்கள் தான் தேவைப்படும். அதுவும் 9 ஆண்டுகள் கழித்து இந்த டிவிகளை கொடுப்பது எந்த விதத்திலும் பலன் அளிக்காது என்கிறார்கள்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, பயனாளிகளுக்கு போக மீதம் இருந்த டிவிகள் அரசு பள்ளிக்கு கொடுக்க சொல்லி உத்தரவு வந்துள்ளது. இந்த நேரத்தில் ஏன் கொடுக்க சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றார்.  

கரோனா காலத்தில் பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு செல்போனில் படிக்கிற அளவிற்கு வசதியும், அதற்கான பயிற்சியும் இல்லாமல் தவித்து வருகிறார்கள். ஒரு வேளை அதற்கான ஏற்பாடாக இருக்குமோ என்கிறார்கள்.  அதிமுக ஆட்சில் அரசு பள்ளிகளுக்கு கலைஞரின் இலவச கலர் டிவி கொடுப்பது என்பது ஆச்சியமான அதிசியம் தான். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Holiday notification for only 7 schools in Mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு  11 மணிக்கு  சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024)  அளித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.  

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.