kalaignar birthday

Advertisment

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான மறைந்த கலைஞர் கருனாநிதியின் 97 ஆவது பிறந்த நாளான ஜூன் 3 புதன்கிழமை அன்று ஈரோட்டில் உள்ள அவரது சிலை முன்புகாதலர்கள்திருமணம் செய்து கொண்டார்கள்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ராகராயன் குட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகாந்த் (வயது 29). இவருக்கும் அதே ஊரான சங்ககிரியையடுத்த அத்தமாப்பேட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் (26 வயது) பிரிந்தியா தேவி, இந்த இருவரும் தான் கலைஞர் கருணாநிதி சிலை முன்பு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார்கள். இதுகுறித்து மனமகன் சந்திரகாந்த் கூறும்போது, நான் லேப் டெக்னீசியன் வேலை பார்த்து வருகிறேன். நானும் பிரிந்தியா தேவியும் பள்ளி வகுப்பு முதல்நல்ல நண்பர்களாகப் பழகி வந்தோம் பின்னர் நாளடைவில் இருவரும் காதலித்தோம். திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். சமூக நீதிக்காக இறுதி வரை போராடியவர் தலைவர் கலைஞர். அவர் உயிரோடு இருக்கும் போது எங்களால் திருமணம் செய்ய இயலவில்லை. ஆகவே தான் அவரது பிறந்த நாளில் அவரது குருகுலமான ஈரோட்டில் உள்ள அவர் சிலை முன்பு நாங்கள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம்" என்றார்.