திமுக தலைவர் கலைஞரின் உடலை அடக்கம் செய்ய மெரினாவிற்கு பதில் வேறு இடம் தர அரசு தயார் என தலைமைச் செயலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவேரி மருத்துவமனை முன்பும், கோபாலபுரம் கலைஞரின் இல்லத்தின் முன்பும் கூடியுள்ள திமுக தொண்டர்கள் மெரினா வேண்டும்... மெரினா வேண்டும்... என்று முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மேலும் திமுக சார்பில், மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷ் அவர்களிடம் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று இரவு 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.