மறைந்த வன்னியர் சங்கதலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான காடுவெட்டி குருவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி,திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காடுவெட்டி குருவின் திருவுருவப் படத்திற்கு,பாமக மற்றும் வன்னியர் சங்க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், துணைபொதுச்செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் சம்பத் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள். அதேபோல், கல்விக்கோயில் வளாகத்தில் உள்ள குருவின்சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டது.