முன்னணி நடிகர்- நடிகைகளுடன் காடுவெட்டி குருவின் வாழ்க்கை படமாகிறது...

Kaduvetti Guru

தமிழ்த்தாய் பிக்சர்ஸ் பட நிறுவனம் 'மாவீரன் ஜெ குரு'என்ற படத்தைத் தயாரிக்கிறது.

அந்தப் பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காடு வெட்டி குருவின் வாழ்க்கை அதிக பொருட்செலவில் படமாக்கப்படுகிறது. இதில் முன்னணி நடிகர்- நடிகைகள் நடிக்க உள்ளனர். காடுவெட்டி குரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு நடக்கிறது. மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வும் நடக்கிறது. காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மேற்பார்வையில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு முடிந்ததும் அரியலூர், பெரம்பலூர், நெய்வேலி, பண்ருட்டி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறும். இப்படத்தினை இளம் இயக்குனர் இயக்குகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

film Kaduvetti guru MLA pmk
இதையும் படியுங்கள்
Subscribe