Skip to main content

காடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு... ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

Kanal Arasu

 

பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ.வும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குருவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் குருவின் நினைவிடம் அருகே குருவின் மகன் கனல் மற்றும் அவரது மருமகன் மனோஜ் ஆகியோரை ஒரு கும்பல் மறித்து பிரச்சனை செய்ததாகவும், பின்னர் ஊர்மக்கள் அங்கு வந்து அவர்களைப் பிரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறிது நேரம் கழித்து ஒரு கும்பல் கனலை அரிவாளால் வெட்ட வரும்போது மனோஜ் குறுக்கே வந்ததால் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கனலையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். 
 


இதனை அறிந்த ஊர் மக்கள் அங்கு வரும்போது அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியது. உடனடியாக கனல், மனோஜ் ஆகிய இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

குருவின் தங்கை செந்தாமரை, இதற்குக் காரணம் பா.ம.க.தான். நாங்கள் ஏற்கனவே இதனைப் பேட்டியில் சொல்லியுள்ளோம். போலீசில் தகுந்த பாதுகாப்பும் கேட்டோம். ஆனால் கொடுக்காததால்தான் இந்தப் பிரச்சனை வந்துள்ளது என்றார். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

கொலையான தந்தை... தாய் எடுத்த சபதம்... காடுவெட்டி குருவின் தொடக்கப்புள்ளி...

    பாட்டாளி மக்கள் கட்சியின் மிகமுக்கிய தலைவராகவும், அக்கட்சியை வலுப்படுத்தியவர்களில் கவனிக்கத்தக்கவராகவும் இருந்தவர் காடுவெட்டி குரு. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில், பிப்ரவரி 01, 1961 ஆம் ஆண்டு பிறந்த குரு, தனது கல்லூரி படிப்பை முடித்த கையோடு தீவிர அரசியலில் ஈடுபடத் த...
Read Full Article / மேலும் படிக்க,
Open in app

Next Story

காடுவெட்டி குரு மகனின் ஆதரவைப் பெற்ற ஐ.ஜே.கே.!

Published on 14/03/2021 | Edited on 14/03/2021

 

IJK CANDIDATE LIST TN ASSEMBLY ELECTION

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 40 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, இரு கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் வெளியானது. 

 

இந்த நிலையில் இன்று (13/03/2021) இரவு சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திய ஐனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். 

 

அப்போது, 'மாவீரன் மஞ்சள் படை' அமைப்பை நடத்திவரும் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் காடுவெட்டி குருவின் மனைவி, சொர்ணலதா ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது..