Skip to main content

அமைச்சர் முன்னிலையில் அடிதடி -உடன்குடியில் அதிமுக கோஷ்டி மோதல்

Published on 15/12/2018 | Edited on 15/12/2018
ர்

 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி நகரில் இன்றைய தினம் காலை 12 மணியளவில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது.   அக்கூட்டத்திற்கு மாவட்டச்செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார்.   அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தார்.   கூட்டத்திற்கு சண்முகநாதன் ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் அமைச்சர், மாவட்டச்செயலாளர் ஆதரவாளர்கள் என்று கோஷ்டிகளாக வந்திருந்தனர்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தின் அதிமுகவின் 6 ஒன்றிய செயலாளர்கள் அமமுக அணியில் இணைந்தனர்.   அவர்களில் உடன்குடி ஒன்றிய அதிமுக ஒன்றிய செயலாளர் அம்மன் நாராயணனும் ஒருவர்.   இவர்களுக்கு பதிலாக உடன்குடி நகர ஒன்றிய பகுதிகளில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டார்கள்.    அப்படி நியமனம் செய்யப்பட்டதில் கட்சி தொண்டர்களுக்கு உடன்பாடு இல்லையாம்.  
குறிப்பாக,  உடன்குடி நகர செயலாளராக மகாராஜன் நியமிக்கப்பட்டதிலும் தொண்டர்களுக்கு எற்புடையதில்லை.  இந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.  ஆரம்பத்தில் பேசிய நிர்வாகிகளுக்கு பின்னர் மாவட்ட கலை இலக்கிய துணைச் செயலாளர் பொன். ஸ்ரீராம் பேசிக்கொண்டிருந்தார்.  இவர்,  அமைச்சர் மற்றும் மா.செ. தரப்புக்கு எதிர்தரப்பான அதிருப்தி கோஷ்டியை சேர்ந்தவர்.    இவர் தன் பேச்சில், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில் தொண்டர்கள் பலருக்கு ஏற்புடையவில்லை.  

 

நம் அமைப்பிலேயே இங்குள்ள  அதிமுகவில் சிலர் அமமுகவில் இருக்கிறார்கள்.  அதே போன்று வேறுசிலர் திமுகவின் தரப்பில் பலனடைகிறார்கள்.   இவ்வாறு ஆதரவாளர்கள் செயல்பட்டால்  கட்சி எப்படி வளரும்.   நகர செயலாளர் ஜெயக்கண்ணனை மாற்ற வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார் .

 

அப்போது மேடையில் அமைச்சருடன் சண்முகநாதனின் ஆதரவாளரான மகேந்திரன் பேசிக்கொண்டிருந்தார்.  அதைக்கண்ட அமைச்சரின் ஆதரவாளர்கள் அவரை மேடையில்  இருந்து கீழே தள்ளிவிட்டனர்.  இதனால் இரு தரப்புக்கும் இடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு,  ஏற்பட்டது.  அடிதடியும் அரங்கேறியது. இதனால், பொன்.ஸ்ரீராம் தன் பேச்சை முடித்துக்கொண்டு அவரது ஆதரவாளர்களோடு வெளியேறினார்.   அவர் வெளியேறிய போதுதான் கூச்சல் குழப்பம் அடங்கியது. அதையடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ நிர்வாகிகளிடம்,  உங்கள் கோரிக்கைகளை தாருங்கள்  பரிசீலிக்கிறோம் என்று சொல்லிவிட்டு கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்.  இதனால் அதிமுகவினரிடையே உடன்குடி பகுதியில் பொறுப்பாளர் நியமன விசயத்தில் அதிருப்தி அதிகரித்த வண்ணம் இருக்கிறது.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஆள் மேல் ஆள் அனுப்புகிறார்கள்' - கடம்பூர் ராஜு பகீர்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
nn

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பிற்காக அனைத்து கட்சிகளும் காத்திருக்கும் சூழ்நிலையில் திமுக தொகுதிப் பங்கீட்டிற்கான இறுதி பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தற்போது வரை கூட்டணிக்கான கதவுகளை திறந்தே வைத்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னரே கூட்டணி பிளவு கண்டிருந்த அதிமுக, பாஜக கட்சிகள் ஒன்றை ஒன்று விமர்சிக்காமல் இருந்த நிலையில், தற்போது மாறி மாறி விமர்சனங்களை வைத்து வருகின்றன. இதற்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.

முன்னரே கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த எடப்பாடி பழனிசாமி, இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை. மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்ப வேண்டாம் என  கட் அன்ட் ரைட்டாக பேசியிருந்தார். எடப்பாடியின் இந்த பேச்சுக்கு பிறகு அரசியல் வட்டாரத்தில் அதிமுக, பாஜக வார்த்தை மோதல்கள் அதிகரித்தது. லேகியம் விற்பனை, வாய்க்கொழுப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோர் விமர்சனங்களை பாஜகவை நோக்கி வைத்தனர். ஆனால் மாற்றாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அதிமுகவின் தலைவர்களான ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரைப் புகழ்ந்து பேசியது மீண்டும் பாஜக, அதிமுக கூட்டணிக்கு அடித்தளமிடும் செயல் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

admk

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த நிமிடம் வரை பாஜக எங்களுடன் கூட்டணி வைக்க தவம் இருக்கிறது. பாஜக வலுவாக இருந்தால் அதிமுகவிற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? பாஜகவின் வாக்கு விகிதம் அதிகரித்திருப்பதாக வரும் கணிப்புகள் எதுவும் உண்மை இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை சேர்க்க பாஜகவினர் ஆள் மேல் ஆள் அனுப்புகிறார்கள். அதிமுக பலமாக இருப்பதால் பாஜக எங்களுக்காக காத்திருக்கிறது. இல்லையெனில் ஏன் காத்திருக்க வேண்டும்?' என்ற கேள்வியை வைத்துள்ளார் கடம்பூர் ராஜூ.

Next Story

“விஜய்யை கண்டு திமுக அஞ்சுகிறது” - கடம்பூர் ராஜு

Published on 15/10/2023 | Edited on 15/10/2023

 

"DMK fears Vijay" - Kadampur Raju

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் உள்ள சமுதாய கூடத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு துவக்கி வைத்தார். 

 

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “விஜய்யை பார்த்து திமுக அஞ்சுகிறது. சினிமாவில் எந்த நடிகர்களாக இருந்தாலும் ஏற்றத்தாழ்வுகளை அரசு பார்க்கக் கூடாது. கடந்த அதிமுக ஆட்சியில் முன்னணி நடிகர்களின் படம் வரும்போது எந்த பாரபட்சமும் பார்க்காமல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுத்திருந்தோம்.

 

ஆனால், தற்போது குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது சரியல்ல. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் திரைப்படங்கள் பாரபட்சமில்லாமல் திரையிடப்பட்டது. ஆனால் தற்போது 200க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படாத சூழ்நிலையில் தான் உள்ளது” என்று தெரிவித்தார்.