Kadambur Raju

டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக அமைச்சர் கடம்பூர் ராஜூ செயல்படுகிறார். சசிகலாவுடன் இணைந்து பணியாற்றியவர். அவர்கள் மூலமாகத்தான் இவர் எம்எல்ஏ சீட் பெற்றார். அதனால் அதிமுகவில் இருப்பவர்களை தினகரன் பக்கம் அனுப்பிவிடுவதுதான் கடம்பூர் ராஜூவின் வேலை என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தப்போது கூறினார்.

Advertisment

இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் ஏதோ விரத்தியில் பேசுகிறார். அப்படிப்பட்ட நிலை இங்கு இல்லை என்பது கட்சியின் தலைமைக்கும், மாவட்டத்தில் என்னோடு பணியாற்றுபவர்களுக்கும் தெரியும். இதற்கு மேல் நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றார்.

Advertisment

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் மார்க்கண்டேயன் பேசியது குறித்து ஓ.பன்னிர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், இருவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று கூறினார்.