/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/302_8.jpg)
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டமன்ற அரங்கில் 06.06.2020 சனிக்கிழமை நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றபின், செய்தியாளர்களைச் சந்தித்தார், தமிழக பால்வளத்துறை அமைச்சர், கே.டி.ராஜேந்திரபாலாஜி.
“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இன்றைய தமிழக முதல்வர் எடப்பாடியார் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு என்பது கட்டுக்குள் உள்ளது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் 6 மற்றும் உள்ளூர் கூட்டுக்குடிநீர் திட்டம் 8 ஆகியவற்றின் மூலம் 7 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு போதுமான தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கரோனா நடவடிக்கைகள் குறித்து நல்ல ஆலோசனைகளை, நல்ல எண்ணத்துடன் யார் கூறினாலும், தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும். இந்தியாவில் பிறந்த அனைவருக்கும், எந்த ஒரு திட்டத்தை பாராட்டி பேசவும், விமர்சனம் செய்யவும் உரிமை உண்டு.” என்றார்.
பாராட்டினைப் போலவே விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்வது, ஆரோக்கியமான அரசியல்தான்! எதையும் தாங்கும் இதயம் என்று இதைத்தான் சொன்னார் அறிஞர் அண்ணா!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)