Advertisment

“என் கையை யாராவது அறுக்க முடியுமா..” - கு.ப.கிருஷ்ணன் ஆவேசம்

K P Krishnan addressed press

திருச்சி பொன்மலை, ஜி.கார்னர் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக வரும் 24 ஆம் தேதி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட ஓ.பி.எஸ். ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தெரிவித்ததாவது; “மாநாடு நிச்சயமாக நடைபெறும். அதிமுகவில் எங்களுக்கு இல்லாத உரிமை எவருக்கும் கிடையாது. யார் என்ன புகார் கொடுத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. நீதிமன்றமோ, இந்திய தேர்தல் ஆணையமோ எந்த தடையும் விதிக்கவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக கையில் பச்சை குத்தி இருக்கிறேன்; இதை அறுத்து எரியவா? அல்லது யாராவது அறுக்க வருவார்களா?” என ஆவேசமாக பேசினார்.

Advertisment

தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள், ‘மாநாட்டிற்கு எத்தனை லட்சம் பேர் வருவார்கள் என கணித்துள்ளீர்கள்’ என்று கேள்வி எழுப்பினர்.

Advertisment

அதற்கு பதில் அளித்த அவர், “மக்களின் உள்ளத்தை அளந்த எந்த ஞானியும் நாட்டில் கிடையாது. எனக்கு கிடைத்த தகவலின்படி, தென்பாண்டி மண்டலத்தில் இருக்கும் மறவர் படை மீன் கொடியுடன் தயார் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். திரண்டு வந்துகொண்டிருக்கிறார்கள். வடக்கே பல்லவ சேனை பாய்ந்து வந்துகொண்டிருக்கிறது. மேற்கே சேரர் படையும் சோழர் படையும் வில் உயர்த்தி வந்துகொண்டிருக்கிறது. தஞ்சையில் புலிக் கொடி ஏந்தி எங்கள் படை வந்துகொண்டிருக்கிறது” என்று பேசினார்.

K P Krishnan addressed press

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், “இரட்டை இலைசின்னம், கொடியை நாங்கள் பயன்படுத்துவோம் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தான். நாங்கள் தான் உண்மையான அதிமுக” என தெரிவித்தார்.

trichy ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe