K N Nheru won in his constituency

Advertisment

திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுக முதன்மைச் செயலாளர்கே.என்.நேரு, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் விஸ்வநாதனிடம் இருந்து பெற்றுக்கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில், “தேர்தலுக்கு முன்பாககுடிநீர், சாக்கடை வசதி, உய்யக்கொண்டான் கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தோம்.அந்த வாக்குறுதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றித் தருவதற்கு பாடுபடுவோம். வெற்றியை தந்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. எல்லா புகழும் தலைவர் ஸ்டாலினுக்கே” எனத் தெரிவித்தார்.