திருச்சி திமுக வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தன்மையோடு அதிகாரம் மிக்கவராக வலம் வருபவர். திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு. இவர் திமுகவின் மிக முக்கியமான வெற்றி மாநாடுகளை திருச்சியில் மிக சிறப்பாக நடத்திக் கொடுத்தார். தனிப்பெரும் மாவட்ட செயலாளராக வலம் வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக தலைமை நிலைய செயலாளராக பதவி உயர்வு பெற்றார்.

K. N. Nehru son

Advertisment

கே.என்.நேரு பதவி ஏற்ற அடுத்த நாளே திருச்சி மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு காடுவெட்டி தியாகராஜன், மகேஷ்பொய்யாமொழி, வைரமணி ஆகியோருக்கு மாவட்ட செயலாளர் பதவி பிரித்து கொடுக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் பதவி அறிவிக்கப்படும் போதே கே.என். நேருவின் ஆதரவாளர்கள் 30 வருடங்களுக்கு மேல் அரசியலில் இருந்தும் தனக்கென்று அரசியல் வாரிசு யாரையும் முன்னிறுத்தாமல் இருந்தார்.

அதே நேரத்தில் அவருடைய மகன் அருண் நேருவை அரசியலில் முன் நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றது. ஆனால் கே என் நேரு தன் மகனை அரசியல் கொண்டுவருவதற்கு தயக்கம் காட்டினார். ஆனால் தற்போது கே என் நேரு அடிக்கடி சென்னைக்கு சென்று விடுவதால் திருச்சியில் கட்சிக்காரர்களை சந்திப்பதில் மிகவும் சிரமமாகி விடும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அருண்நேருவை அரசியலில் கொண்டுவர வேண்டும் என்று கட்சியினர் விருப்பபட்டனர்.

Advertisment

இந்த நிலையில் திடீரென கே.என்.நேருவின் மகன் அருண் நேரு இன்று திமுக அலுவலகத்திற்கு வந்து வழக்கம்போல் கட்சியினரை சந்தித்தது கட்சியினர் இடையே பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. கே என் நேரு கலந்து கொள்ளவேண்டிய நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அருண் நேரு கலந்து கொண்டார். உடன் திமுக மாநகர செயலாளர்அன்பழகன் மற்றும் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர் சென்றனர்.

குறிப்பாக திருவெறும்பூர் பகுதியில் வெடிவைத்து குதிரை மற்றும் செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அருண் நேருவை வரவேற்பு போஸ்டர்கள் திருச்சி மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டது. கே என் நேரு இனி சென்னைதான் திருச்சி மாநகர் முழுவதும் அன்பில் மகேஷ் தான் என்று கூறப்பட்ட நிலையில் கே.என்.நேரு மகன் அருண் நேரு திடீரென அரசியல் களத்தில் இறங்கியிருப்பது திருச்சி திமுகவின் இடையே பெரிய வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.