Advertisment

கையாலாகாத காவல்துறையை கண்டித்து போராட்டம்: கே.பாலகிருஷ்ணன் 

K Balakrishnan

Advertisment

தூத்துக்குடியில்நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 மாநில மாநாட்டில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக இருந்த கே.பாலகிருஷ்ணன் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டு முதல் முறையாக பிறந்த ஊரான சிதம்பரத்திற்கு புதன்கிழமை இரவு வருகை தந்தார். இவரை மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர்கள் மேளதாள முழங்க வெடிவெடித்து வரவேற்ப்பு அளித்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்றனர். இதனைதொடர்ந்து அவர் சிதம்பரம் நகரில் உள்ள அம்பேத்கார், பெரியார், சாமி சகஜானந்தா ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பிஜேபியின் மதவெறி மேலொங்கியுள்ளது. ஆளுநரை கொண்டு போட்டி அரசாங்கத்தை பா.ஜ.க. நடத்தி தமிழகத்தில் வருகிறது. இதை தட்டி கேட்க திராணியல்லாத அரசாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு உள்ளது. மேலும் அதிமுக அரசு பாஜகவின் கூர் முனையாக உள்ளது. மக்களுக்கு விரோதமாக நடைபெறும் திட்டங்களையும், செயல்களையும் கண்டித்து இடதுசாரிகள் மட்டுமல்லாத கருத்தை ஏற்றுகொள்கிறவர்களுடன் இணைந்து மக்கள் நலன் காக்க போராட உள்ளோம். தாய்மொழி தினத்தில் மோடி சமஸ்கிருதத்தை விட தமிழ்மொழிதான் சிறந்த மொழி என்று கூறியுள்ளார். ஆட்சிமொழியாகவும், நீதி மன்றத்தில் வழக்கு மொழியாக தமிழை ஏற்றுகொள்ளாமல் புறக்கனிக்கபடுகிறது. தமிழ்மொழியில் படித்தால் வேலைகிடைக்காது என்று நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்ட தொடர் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும். மேலும் விவசாயம் அழிவு, கல்வி வியபாரம், தொழிலாளர் பிரச்சனை, பாலின அடக்குமுறை, சாதிய பாகுபாடு உள்ளிட்ட அனைத்து கொடுமைகளையும் எதிர்த்து தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி போராடும்.

காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தில் அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அதேபோல் மக்கள் நலன் காக்கும் பிரச்சணையிலும் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும். கர்நாட தேர்தல் வர இருப்பதால் மோடி ஓட்டுக்காக காவேரி ஆணையத்தை அமைக்கமாட்டார். கமலும்,ரஜினியும் மக்கள் நலனுக்கு என்ன செய்ய போகிறார்கள். கொள்கைகள் என்ன என்று தெளிவுபடுத்தவில்லை. இருவரும் மதவெறி தூண்டுதல் பற்றியும், சாதிய கொடுமைகள் பற்றியும், ஆணவ கொலைகள், பொருளாதர சீர்கேடு,சாதிமறுப்பு திருமணம் உள்ளிட்டவைகளுக்கு அவர்களின் நிலைபாடு என்னா என்று தெளிவுபடுத்த வேண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

Advertisment

தமிழகமெங்கும தாலிசெயின் அறுப்பு, கொலை, கொள்ளைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க திராணியில்லாத கையாலாக காவல் துறையினர். தமிழக நலனை கருதில்கொண்டு போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, தூத்துக்குடி மாநாட்டுக்கு அனுமதி பெற்று ஜனநாயக முறையில் பேரணி சென்ற செந்தொண்டர்கள் மீது ஆனியுடன் இருந்த சென்டரிங் பலகையை எடுத்து தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டனத்திற்குறியது. காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். சமூக விரோதிகள் போல் இருக்ககூடாது. சம்பந்தபட்ட காவல்துறை அதிகாரியை பணிநீக்கம் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இன்று வியாழக்கிழமை கண்டஆர்பாட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொள்ளவேண்டும் என்றார்.

காளிதாஸ்

K Balakrishnan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe