தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனுக்கு கடந்த 24-ந் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pmk 89.jpg)
இந்தநிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அன்பழகனின் உடல் நிலை பற்றியும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி ஆகியோரும் ராமதாசுடன் சென்று அன்பழகனின் உடல் நிலையை கேட்டறிந்தனர். ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அன்பழகன் விரைவில் நலம் பெற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று பேராசிரியர் க.அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
Follow Us