Skip to main content

ஜூ.வி.செய்தியாளர்கள் மீது வழக்கு! தமிமுன் அன்சாரி கண்டனம்!

Published on 30/12/2019 | Edited on 30/12/2019

 

ஜூனியர் விகடன் இதழின் செய்தியாளர் மற்றும் புகைப்படக்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

தமிழகத்தில் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளிடம் கருத்து கணிப்பு நடத்தியதற்காக ஜூனியர் விகடன் இதழின் செய்தியாளர் சிந்து, புகைப்படக்காரர் ராம்குமார் ஆகியோர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் குமரி மாவட்டம், மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இதை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
 

THAMIMUN ANSARI


அவர்களுக்கு இந்திய குடியுரிமை தேவையா?இரட்டை குடியுரிமை தேவையா? அல்லது இலங்கைக்கு திரும்பி செல்ல விருப்பமா? என்ற 3 கேள்விகளுடன் அம்மக்களை செய்தியாளர்கள் சந்தித்து கருத்து கேட்டதை தமிழக அரசு பொறுத்துக் கொள்ளாமல் வழக்குகளை பாய்ச்சியுள்ளது.

 

 அந்த மக்களின் பிரச்சனைகள் மைய்ய நீரோட்டத்திற்கு வந்திருக்கும் போது, இது குறித்து அவர்களிடம் கருத்து கேட்பதில் எந்த தவறும் இல்லை. அதுதான் ஜனநாயகமாகும். உண்மையான நிலவரம் வெளி உலகிற்கு தெரியக்கூடாது என்ற நோக்கோடு மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. இது பத்திரிக்கையாளர்களின் நியாயமான சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். 

 

தமிழக அரசு, இவ்விரு பத்திரிக்கையாளர்களின் மீது போட்ட வழக்குகளை திரும்ப பெற்று, இதழியல் ஜனநாயகத்தை பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

செய்தியாளர் மீது தாக்குதல்; தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Condemnation of Tamil Nadu Chief Minister M. K. Stalin incident on Journalist

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேசபிரபு. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் வழக்கம்போல் நேற்று இரவு (24-01-24) செய்தி சேகரித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதத்தால் நேசபிரபுவை சரமாரியாக வெட்டி தப்பி ஓடியுள்ளனர்.

இதில் நேசபிரபு படுகாயமடைந்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த நேசபிரபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.

இது குறித்த விசாரணையில், கடந்த சில நாட்களாக சில மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாகக் காவல்துறையின் அவசர எண்ணைத் தொடர்பு கொண்டு செய்தியாளர் நேசபிரபு புகார் அளித்து வந்துள்ளார். ஆனால், காவல்துறை தரப்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நேசபிரபுவை மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

Condemnation of Tamil Nadu Chief Minister M. K. Stalin incident on Journalist

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், செய்தியாளர் மீது நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், “ஊடகச் செய்தியாளர் நேசபிரபு மீதான தாக்குதல் மிகவும் கண்டனத்துக்குரியது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், செய்தியாளரை தாக்கிய செய்தி அறிந்து வருந்தினேன். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சம்பவம் நடப்பதற்கு முன் செய்தியாளர் பாதுகாப்பு கோரியும், நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை காத்திருப்பு பட்டியலில் வைக்கத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ள தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபுவுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.