Judgment in Edappadi appeal case tomorrow?

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அ.தி.மு.க.வில் ஜூன் 23- ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

Advertisment

இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி முடிவடைந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய இருதரப்புக்கும் உத்தரவிட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில் இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். தொடர்ந்து ஓபிஎஸ் 'அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்' என அறிவுறுத்தி வரும் நிலையில், எடப்பாடி தரப்பு அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு அதிமுக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.