karur

Advertisment

திருச்சி மாவட்டம், வையம்பட்டி வியாபாரிகள் ''சிலர் பிரச்சனை செய்வதால் கடைதிறக்க முடியவில்லை'' என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியிடம் முறையிட்டுள்ளனர் வியாபாரிகள். இதையடுத்து நேரில் பார்வையிட்ட ஜோதிமணி, வியாபாரிகளின் பிரச்சனைகளை திருச்சி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதையடுத்து கடைகள் உடனடியாக திறக்கப்பட்டது. கடைகள் திறக்கப்பட்ட உடன் அதனை நேரில் பார்வையிட்டு வியாபாரிகளை சந்தித்தார். அப்போது வியாபாரிகள் கடைகளை திறக்க உதவியதற்கு நன்றி தெரிவித்தனர்.

கடைகள் திறக்கப்பட்டதற்கு வியாபாரிகள் சார்பாக மாவட்ட ஆட்சியர் சிவராஜ்ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜோதிமணி, இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார்.