John Pandian addressed the public meeting

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜான் பாண்டியன் கலந்துகொண்டார்.

Advertisment

கூட்டத்தில் பேசிய அவர், “முதல்வராக இபிஎஸ் இருந்தபோது அவரிடம் 100 முறை நடந்திருப்பேன். தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணைக்காக அவர்களிடம் சென்றேன். இங்கு சட்டமாக உருவாக்கி மத்திய அரசுக்கு அனுப்புங்கள் எனச் சொன்னேன். இவர்கள் கொடுக்கவில்லை. ஆட்சியில் இருந்த பழனிசாமியிடம் இருந்து உடனடியாக தேவேந்திர குல வேளாளர் கோப்புகளை அனுப்பு என்கிறகட்டளையின் அடிப்படையில் அனுப்பினார்கள்.

Advertisment

இவர்களாக முன்வந்து அனுப்பவில்லை. ஓபிஎஸ்-ம் கொடுக்கவில்லை. இபிஎஸ்-ம் கொடுக்கவில்லை. மத்திய அரசு கேட்டு வாங்கினார்கள். வாங்கியதும் மோடி, அரசு விழாவில் அறிவித்தார். தேவேந்திரன் நரேந்திரன் மோடி என சொன்னார். பாராளுமன்றத்தில் பேசி அரசாணை வெளியிட்டார்கள். இதுதான் பெருமை” எனக் கூறினார்.