சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியான ‘ஒரு அடார் லவ்’ படத்தின் ‘மாணிக்ய மலராய பூவி’ பாடல் இணையத்தில் வைரல் ஆனது. அதில் நடித்திருக்கும் ப்ரியா ப்ரகாஷ் வாரியர் புருவத்தை உயர்த்தி சிரிக்கும் காட்சி லட்சக்கணக்கில் பகிரப்பட்டது.

jignesh tweet

அந்தக் காட்சியை தனது ட்விட்டர் தளத்தில் பதிவேற்றி ஆர்.எஸ்.எஸ் இன்று நடத்தும் காதலர் தின எதிர்ப்பு போராட்டத்தை கிண்டலடித்துள்ளார் குஜராத் மாநில வட்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள அவர் ‘இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள். ‘மாணிக்ய மலராய பூவி’ பாடலின் பெரும் வெற்றிதான் 'ஆர்.எஸ்.எஸ்'ன் காதலர் தின எதிர்ப்பு போராட்டத்திற்கான சரியான பதிலடி. ஒருவரை வெறுப்பதை விட அவரை காதலிப்பதையே விரும்புவோம் என்று இந்தியர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். இந்த அழகான வீடியோவை பாருங்கள்’ என்று அந்த குறிப்பிட்ட வீடியோ காட்சியை பதிவேற்றியுள்ளார்.