Jeyakumar's passionate response to Anbumani's statement

Advertisment

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் ஈபிஎஸ்-இன் ஆதரவாளரான ஜெயக்குமார் இன்று சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக தான் அன்புமணியை அடையாளம் காட்டியது. தற்போது அதிமுகவை தவறாகப் பேசுவது சரியல்ல எனக் கூறினார்.

அவர் பேசியதாவது, “அதிமுக தான் அன்புமணியை எம்.பி என அடையாளம் காட்டியது. அப்படி எல்லாம் இருந்து விட்டு தற்போது அதிமுக நான்காக உடைந்துவிட்டது என்றால் நிச்சயமாக இந்தக் கருத்தை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். கண்டிப்பாக அன்புமணியைப் பார்த்து எள்ளி நகையாடும் வகையில்தான் அவரது கூற்று உள்ளது. இதுபோன்ற கருத்துகளை சொல்லிசிறுமைப்படுத்தும் வேலையில் தயவு செய்து எதிர்காலத்தில் ஈடுபட வேண்டாம். அப்படி வீணாக சீண்டினால் அதற்கு தக்க பதிலடி நிச்சயமாக நாங்களும் கொடுப்போம். ஒன்று சொன்னால் நாங்கள் நூறு சொல்லுவோம்.

அதிமுக ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்களை திமுக அரசு வெளியேற்றியுள்ளது. சரியான ஆவணங்கள் இல்லாததால் வெளியேற்றி உள்ளதாக மா.சுப்ரமணியன் சொல்கிறார். திமுகவை பொறுத்தவரை தேர்தல் வாக்குறுதியில் என்ன சொன்னார்கள். 3.5 லட்சம் அரசுப் பணிகள் காலியாக உள்ளது. அதை நிரப்புவோம் எனக் கூறினார்கள். அதோடு மட்டுமல்லாமல் வருடத்திற்கு 1 லட்சம் பேரை வேலைக்கு எடுப்போம் எனக் கூறினார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

Advertisment

ஒருபக்கம்ஒப்பந்த ஊழியர்கள் போராடுகிறார்கள். சமஊதியம் சம வேலை எனச் சொன்னது திமுக தான். பல நாட்களாக போராட்டம் செய்கிறார்கள். போராட்டத்திற்குத்தீர்வு காணும் விதத்தில் குழு ஒன்று போடுகிறார்களாம். அந்தக் குழுவே கண் துடைப்புக் குழுதான். குழு போடுவதெல்லாம் சுத்த விடும் வேலைதான்” எனக் கூறினார்.