ADVERTISEMENT

“யாரைச் சேர்ப்பது, யாரைக் கழட்டிவிடுவது என தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம்” - ஜெயக்குமார்

01:06 PM Mar 18, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் தேதியை இ.பி.எஸ். அறிவித்து, இன்று முதல் ஆளாய் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதுவொருபுறமிருக்க, அதிமுகவுடன் கூட்டணி என்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிமுக, பாஜக கூட்டணி குறித்துப் பேசியதாகச் சொல்லப்படும் நிலையில், இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இந்தத் தேர்தல் அவசர அவசரமாக நடைபெறுகிறதா?

அவசரமாகவெல்லாம் நடைபெறவில்லை. கடந்த முறை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் எப்படி நடந்தது என்பதை திரும்பிப் பாருங்கள். எல்லாம் முறைப்படி; சட்டப்படி தான் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் அதிக வாக்குவங்கி உள்ள கட்சி அதிமுக. அப்படி இருக்கும்போது, குறைவான வாக்கு உள்ள பாஜகவுடன் சகித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறதா?

நாங்கள் எங்கே சகித்துக்கொண்டு செல்கிறோம். உங்கள் பார்வை தான் அப்படி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் பார்வை அப்படி இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வழிகாட்டலில் எங்களுக்கென தனி அடையாளம், தனித்தன்மை இருக்கிறது. கொட்டக் கொட்ட குனியும் ஆட்கள் நாங்கள் கிடையாது. யாரையும் எங்களை கொட்டவும் விடமாட்டோம், நாங்களும் குனியமாட்டோம்.

கூட்டணி குறித்து கட்சி முடிவெடுக்கும். எங்கள் தலைமையில் தான் கூட்டணி. இரயில் பெட்டிக்கு என்ஜின் எப்படியோ அப்படித்தான் அதிமுக. பெட்டிகள் நிறையச் சேரும். பெட்டிகளைச் சேர்ப்பதும், கழட்டிவிடுவதும் என்ஜினுக்குத்தான் தெரியும். தேர்தல் நேரத்தில் எந்தெந்தப் பெட்டிகளைச் சேர்ப்பது, எந்தெந்தப் பெட்டிகளைக் கழட்டிவிடுவது என்பதெல்லாம் அப்போது முடிவு எடுப்போம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT