/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/JAYA.jpg)
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படம் தமிழக சட்டப்பேரவையில் இன்று திறந்து வைக்கப்படுகிறது. இதில் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
சட்டப்பேரவையில் ஏற்கனவே 10 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், மற்ற தலைவர்களின் படங்களைப் போன்று 7 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட ஜெயலலிதா படம் சட்டப்பேரவை மண்டபத்தில் இன்று வைக்கப்பட உள்ளது.
இதனிடையே, ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சியில் தி.மு.க. பங்கேற்காது என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேபோன்று காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளும் கலந்துகொள்ளப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)