Advertisment

ஜெகன் மோகனின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்ற நாளில் இருந்து பல அதிரடி திட்டங்களை அறிவித்து அனைத்து தரப்பு மக்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். சமீபத்தில் 4 இலட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.அதோடு வேலைவாய்ப்பை இளைஞர்களுக்கு எந்த துறையில் கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த நிலையில் மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ஆந்திராவில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் 75% ஆந்திரா மக்களை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய சட்டம் அனைத்து விதமான பணிகளுக்கும் பொருந்தும் என்று அறிவித்துள்ளார்.

Advertisment

jegan

அதில் தகுதியான பணியாட்கள் கிடைக்கவில்லை என்றால் அவர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். அதோடு அடுத்த மூன்றாண்டுகளுக்கு இதற்கான அனைத்து நடைமுறைகளும் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என உறுதியாக கூறியுள்ளார். மேலும் மூண்டு மாதங்களுக்கு ஒரு முறை பணியாளர்கள் குறித்த விவரங்களை அரசாங்கத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஜெகனின் இந்த அறிவிப்பால் அம்மாநில மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Advertisment
Andhra jeganmohan reddy New plan politics
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe