Advertisment

ஆந்திர மக்களை ஆச்சர்யப்படுத்திய ஜெகன் மோகன்!

ஆந்திராவில் முதலமைச்சராக பதவிக்கு வந்த நாளில் இருந்து இன்று வரை பல அதிரடி திட்டங்களை அறிவித்து மக்களை கவர்ந்து வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி. கடந்த வாரத்தில் ஆந்திராவில் ஆந்திரா மக்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி தனது சொந்த பயணமாக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வந்தன. அதாவது வருகிற ஆகஸ்ட் மாதம் கிறுஸ்துவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேம் செல்ல இருப்பதாக சொல்கின்றனர். தனது சொந்த விஷயமாக பயணம் மேற்கொள்ளவுள்ளதால் அரசு செலவை எற்க மறுத்தாதாக கூறப்படுகிறது.

Advertisment

jegan

இது பற்றி விசாரித்த போது, ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும் முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டி தனது குடும்பத்துடன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொறு வருடமும் கிறுஸ்துவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் வருகிற ஆகஸ்டு மாதம் ஜெகன் மோகன் ரெட்டி தனது குடும்பத்துடன் ஐதராபாத்திலிருந்து ஜெருசலேம் செல்கிறார். அந்த பயண செலவை அரசு கணக்கில் செல்லாமல் தனது சொந்த செலவில் ஜெகன் போவது ஆந்திரமக்களை மட்டுமின்றி அரசியல் தலைவர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

people jeganmohan reddy politics Andhra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe