ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தன.சேகர் தலைமையில், அங்கராயநல்லூர், வானதிரையன்பட்டிணம், பிலிச்சுக்குழி, இடையார், கச்சிபெருமாள், துளாரங்குறிச்சி ஆகிய ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், பொதுமக்களிடத்தில் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

Advertisment

இதில், அவருடன் ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு துணை தலைவர் லதா கண்ணன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.