மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரின் புகைப்படம், சிலை போன்றவற்றிற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். மேலும், இணையத்தில் பதிவிட்டும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, சிலையின் கீழ் இருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வராஜ் மற்றும் மக்கள் செய்தி தொடர்புத் துறை இயக்குநர் மோகன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.