ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அதிமுக தொண்டர்கள் பேரணியாக சென்றனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஜெயலலிதாவின் உருவ படம் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. அண்ணாசாலை வழியாக நடைபெற்ற இந்த பேரணியில் அதிமுக தொண்டர்கள் பலரும் கருப்பு உடையணிந்து கலந்துகொண்டனர்.