Advertisment

ஜெயலலிதா வளர்த்த கட்சிக்கு துரோகம் செய்த சசிகலா... அமைச்சர் கே.சி.வீரமணி...

திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு செல்லும் ஒரு புதிய குளிர்சாதன பேருந்து இயக்கத்தை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று தொடங்கி வைத்தார்.

Advertisment

K.C. Veeramani

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும். அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளது. நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவும் கூட்டணி கட்சிகளும் அதிக இடங்களை கைப்பற்றும் என்றார்.

மேலும் அவர், சிறையில் இருக்கும் சசிகலா விடுதலை ஆன உடன் அதிமுகவில் மாற்றம் வரும் என கூறுவதை ஏற்க முடியாது. எந்த மாற்றமும் அதிமுகவில் வராது. சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை எதிர்த்து நாங்கள் தர்மயுத்தம் நடத்தினோம்.

Advertisment

ஜெயலலிதா வளர்த்த கட்சிக்கு துரோகம் செய்த சசிகலா குடும்பத்தினரை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். அதிமுகவில் இனி எப்போதும் சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இடமில்லை. அமமுக முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து கட்சிப் பணியாற்றி வருகிறார்கள் என்றார்.

admk Jayalalithaa k.c.veeramani minister sasikala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe