Jayakumar's words; Unforgettably remembered OPS

Advertisment

தனது பலத்தை நிரூபிக்கவும் அதிமுகவின் முப்பெரும் விழாவினைக் கொண்டாடவும் திருச்சியில் மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தார் ஓபிஎஸ். திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.மாநாட்டில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னைக் குறித்து பேசியதை குறிப்பிட்டுப் பேசினார். இதற்கு முன் ஒருமுறை ஓபிஎஸ் தனியாக நின்று டீ ஆற்றுகிறார் என ஜெயக்குமார் பேசியதாக குறிப்பிட்ட ஓபிஎஸ் அதற்கு தன் பாணியில் பதில் அளித்தார்.

அது குறித்து பேசிய அவர், “ஜெயக்குமார் சொல்கிறார், பன்னீர்செல்வம் தனியாக நின்று டீ ஆற்றுகிறார் என்று. பார்த்தீர்களா எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று. இது கட்சி அமைப்பிலுள்ள 33 மாவட்டங்களில் மட்டும் இருந்து இங்கு வந்தவர்கள்தான் இந்த கூட்டம். இன்னும் 55 மாவட்டங்கள் உள்ளன. அந்த மாவட்டங்களிலும் இதுபோன்று தொண்டர்கள் கூடும் மாநாடு உறுதியாக நடக்கும். எங்கள் வேலை எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களை ஒன்று சேர்க்கும் பணி. அப்படிஒன்று சேர்த்து கட்டுக்கோப்பான கட்சியை வழிநடத்துவோம்” எனக் கூறினார்.