பொதுவாக புள்ளிவிவரத்தை வைத்து பேசக்கூடாது என்று ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/P. Chidambaram-jayakumar 500.jpg)
தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில் 1993 முதல் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144. இந்தியாவில் முதலிடத்தில் தமிழ்நாடு என்பது வெட்கக்கேடு! மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? உயிரிழந்த 144 மனிதர்கள் எந்தச் சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் என்று விசாரித்துப் பாருங்களேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக புள்ளிவிவரத்தை வைத்து பேசக்கூடாது. மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளக்கூடாது என்பதில் அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதற்காக இயந்திரங்கள் வாங்கப்படுகிறது. அந்த அக்கறை அரசுக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் இயந்திரங்கள் வாங்கப்படுகிறது என்றார்.
Follow Us