Advertisment

jayakumar talks about karnataka election and bjp alliance related 

சென்னை திருவிக நகர் ஆடுதொட்டி பகுதியில்அதிமுக சார்பில் நேற்று நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து அங்கு இருந்தவர்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.

Advertisment

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "கர்நாடகாவில் நடைபெற உள்ளசட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே கூட்டணிவிஷயத்தில் எவ்வித பிரச்சனையும் கிடையாது. ஏற்கனவேகர்நாடக தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவு செய்து அதன்படி தற்போது வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில சட்டமன்ற தொகுதிகளில் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் உள்ள கூட்டணியில் தான் பாஜக உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இருக்கும் என எடப்பாடி பழனிசாமியும் கூறியுள்ளார். அதனை அமித்ஷாவும் உறுதி செய்துள்ளார். கூட்டணியை பொறுத்தவரை கொள்கைக்கும் சித்தாந்தத்திற்கும் சம்பந்தம்கிடையாது. நோன்பு திறப்பு நிகழ்ச்சி காலம்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா காலத்தில் இருந்து இது நடைமுறையில் உள்ளது. இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது.

பாஜகவை பொறுத்தவரை அடக்கி வாசிப்பது நல்லது. அது அவர்களுக்கு வருகின்ற தேர்தலில் நல்ல விஷயமாகஅமையும். அடக்கி வாசிக்கவில்லை என்றால் வருகின்றதேர்தலில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். அம்மா உணவகங்களை பொறுத்தவரை சேவை மனப்பான்மையோடு அரசு செயல்பட வேண்டும். இதில் லாப நஷ்ட கணக்கை பார்க்கக் கூடாது" எனத்தெரிவித்தார்.