Advertisment

“ஒருங்கிணைப்பாளருக்கு அந்தச் சட்டம் பொருந்தாதா?” ஓ.பி.எஸ்.க்கு ஜெயக்குமார் கேள்வி! 

Jayakumar raised question to ops

Advertisment

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுகவில் ஒற்றைத் தலைமைகுறித்தானவிவாதங்கள் நடந்து வருகின்றன. ஓ.பன்னீர்செல்வம் ஒற்றைத் தலைமைக்கு மறுப்பு தெரிவித்தும், எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமைக் கொண்டுவருவது குறித்து தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தவர்களைஓபிஎஸ்தொடர்ந்து சந்திக்கிறார். அவர்களோடு எந்தவிதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று நீங்கள் அறிக்கை கொடுத்தீர்களே. ஒருங்கிணைப்பாளருக்கு அந்தச் சட்டம் பொருந்தாதா? ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு சட்டம், சாதாரண தொண்டர்களுக்கு ஒரு சட்டமா” எனக் கேள்வியெழுப்பினார்.

admk eps jayakumar ops
இதையும் படியுங்கள்
Subscribe