Advertisment

”ஓபிஎஸ் அண்ணனை ஓரங்கட்டும் எண்ணமில்லை. அதேநேரத்தில்...” - ஜெயக்குமார் பேட்டி 

D. Jayakumar

அதிமுக பொதுக்குழு, செயற்குழுவரும் 23ஆம் தேதி கூடவுள்ள நிலையில், அதிமுகவினர் மத்தியில் ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்துவருகிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அந்தச் சந்திப்பில் அவர் கூறியதாவது, “அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் நடந்ததை நான் விலாவாரியாக சொன்னால்தான் அது தவறு. தொண்டர்களின் கோரிக்கையாக ஒற்றைத்தலைமை வலியுறுத்தப்பட்டது என்று மட்டும்தான் நான் கூறினேன். ஜெயலலிதாமறைவுக்குப் பிறகு முதலமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர் தேர்வின்போதும் இதே மாதிரி பிரச்சனை வந்து, பின்னர் தீர்க்கப்பட்டது. அதேபோல இந்த விவகாரத்திலும் சுமூக முடிவு எட்டப்படும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் நூற்றுக்கும் மேற்பட்ட முறை திருத்தப்பட்டிருக்கிறது. கட்சியின் உச்சபட்ச அதிகாரம் பொதுக்குழுதான். அந்தப் பொதுக்குழு நினைத்தால் விதியை திருத்தலாம், புதிய விதியை கொண்டுவரலாம். ஓபிஎஸ் அண்ணனை ஓரங்கட்ட வேண்டும் என்ற எண்ணமில்லை. அதேநேரத்தில் கட்சிக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதுதான் முடிவு”. இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Advertisment

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe