/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/50_70.jpg)
நாடாளுமன்ற கூட்டுக்குழுவிலிருந்து 10 எம்.பி.க்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றுநடைபெற்றவக்புமசோதாதொடர்பானநாடாளுமன்றகூட்டுக்குழுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்ஆ.ராசா,கல்யாண்பானர்ஜி,முகமதுஜாவேத்,அசாதுதீன் ஓவைசி,நசீர்ஹுசைன்,மொஹிபுல்லா,முகமதுஅப்துல்லா,அரவிந்த்சாவந்த்,நதீம்-உல்ஹக்,இம்ரான்மசூத்ஆகியோர்இடைநீக்கம்செய்யப்பட்டிருப்பதுஒரு ஜனநாயக படுகொலை ஆகும்.
வஃக்புசட்டத்திருத்தமசோதாவின்கூட்டுக்குழு,இரண்டுஅவைகளிலும்சேர்த்துமொத்தம்31உறுப்பினர்களுடன்அமைக்கப்பட்டது. மக்களவைக்கு21மற்றும் மாநிலங்களவைக்கு 10 உறுப்பினர்கள் இடம் இடம்பெற்றனர். கூட்டுக்குழுவின் 31 உறுப்பினர்களில் பாஜக 11, அதன் கூட்டணிகள் 5என 16 எம்பிக்கள் உள்ளனர். நியமனஎம்பிக்கள் 2என அரசுக்கு ஆதரவாக மொத்தம் 18உறுப்பினர்கள்உள்ளனர். கூட்டுக்குழு நாடு முழுவதும் பயணம் செய்து பல தரப்பினருடமிருந்தும் ஆலோசனைகளை பெற்றது. இவற்றை ஆய்வு செய்ய தங்களுக்குபோதியஅவகாசம்வழங்கப்படவில்லைஎன்றுஎதிர்க்கட்சிஎம்.பிக்கள்குரல் எழுப்பிய நிலையில்அவர்கள்இடைநீக்கம்செய்யப்பட்டிருக்கிறார்கள். டில்லி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்குமுன்பாகஅரசியல்ஆதாயம்கருதிவக்பு திருத்தச் சட்டம் மசோதாவை உடனடியாகஅமல்படுத்துவதற்குஒன்றியஅரசுமுயன்று வருவது தெளிவாகிறது.
சிறுபான்மையினர்கள்உரிமையைப்பறிப்பதிலும்சிறுபான்மையினர்நலனில்அக்கறை கொண்டு செயலாற்றுபவர்களைஒடுக்குவதிலும்ஒன்றியஅரசுமுன்மையாகச் செயல்படுகிறது. நாடாளுமன்ற கூட்டுக் குழுஉறுப்பினர்கள்இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில்கடும்கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன் " என்று தெரிவித்துள்ளார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)