மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை தமிழகத்தில் தொடங்கிய தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் பல அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் காலை முதலே வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் ஈஷா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ் அவரின் மக்களுடன் வந்து முட்டத்து வயல் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.