அரக்கோணம் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மனைவி அனுஷ்யா மறைவுக்கு, துணை முதலமைச்சரும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில், ''முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் அவர்களின் துணைவியார் அனுஷ்யா அவர்கள் மறைவெய்திய செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது. துணைவியாரை இழந்துவாடும் ஜெகத்ரட்சகன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/400.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/401.jpg)