நேற்று ஆந்திரா சட்டமன்றத்தில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது தொடர்பான பிரச்சனை குறித்த விவாதம் நடந்தது.
அப்போது முதல்வர் ஜெகன் மோகன் வட்டியில்லா கடன்கள் குறித்து தவறான தகவல்களை வெளியிடுவதாக கூறிய தெலுங்கு தேசம் கட்சி உரிமை மீறல் தீர்மானத்தை வழங்கியது. மேலும், அதுகுறித்து பேசிய சந்திரபாபு முதல்வர் ஜெகன்மோகன் தவறான தகவல்களை அளித்ததை நிரூபித்தால் அவர் பதவி விலக தயாரா எனக் கேள்வி எழுப்பினார். தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் அப்போது கூச்சலிட்டனர்.
இதைத்தொடர்ந்து முதல்வர் ஜெகன்மோகன் பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் கோபமான ஜெகன் மோகன் தெலுங்கு தேசம் கட்சியினரையும், சந்திரபாபுவையும் பார்த்து எல்லோரும் அமைதியாக உட்காருங்கள். சந்திரபாபு பேசும்போது நாங்கள் எதாவது பேசினோமா? அமைதியாக உட்காருங்கள். நாங்கள் 150 பேர் இருக்கிறோம், எழுந்துவந்தால் நீங்கள் தரையில்கூட அமரமுடியாது. நான் எங்கள் கட்சி உறுப்பினர்களை சமாதானப்படுத்திக்கொண்டிருக்கிறேன்.
உங்களிடம் மரியாதை இல்லை, கௌரவம் இல்லை. நீங்கள் இப்படி கண்களை பெரிதாக்கி பார்த்து முறைத்தால் பயந்துவிடுவோமா, பயப்படமாட்டோம். உட்காருங்கள், உங்கள் எம்.எல்.ஏ.க்களை அமர சொல்லுங்கள், அமருங்கள், அமருங்கள்என ஆவேசமாகக்கூறினார்.