Advertisment

கண்ணம்மாபேட்டை மயானத்தில் குவிந்த ஜெ.அன்பழகன் ஆதரவாளர்கள் (படங்கள்)

Advertisment

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 62. கடந்த 2ஆம் தேதியன்று மூச்சுத் திணறலுடன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் கரோனா பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று காலை 8 மணி அளவில்சிகிச்சை பலனின்றிகாலமானார்.

ஜெ.அன்பழகனின் இறுதிச்சடங்கு இன்று மாலை கண்ணம்மாபேட்டை மயானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு வெளியானவுடன் கட்சித் தொண்டர்கள் மயானத்திற்க்கு வெளியே காத்திருந்தனர்.

j anbazhagan
இதையும் படியுங்கள்
Subscribe