'It's the story of a stomach ache before a headache goes away' - Edappadi review

அண்மையில் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்த பொங்கல் தொகுப்பு அறிவிப்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சை அரிசி, சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய்பொங்கல் பரிசு வழங்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் கரும்பு சேர்க்கப்படாதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில், விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். அதேபோல், அரசியல் கட்சிகள் சார்பிலும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Advertisment

 'It's the story of a stomach ache before a headache goes away' - Edappadi review

அதனைத் தொடர்ந்து தமிழக அரசு கரும்புடன் பச்சை அரிசி, சர்க்கரை உடன் 1000 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. இந்த நிலையில், அதிமுக சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''தலைவலி தீர்வதற்குள் வயிற்று வலி வந்த கதையாக கரும்பு பிரச்சனை முடிவதற்குள் வேட்டி, சேலை பிரச்சனை வந்துவிட்டது. பொங்கலுக்கு அரசு இலவச வேட்டி, சேலை வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. வேட்டி, சேலை திட்டத்திற்கு உதவாத தரமற்ற நூல்களை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது. 90 சதவீத நெசவாளர்கள் தங்களுக்கு தரப்பட்ட நூல் பேல்களை தரம் இல்லை என அரசுக்கே திருப்பி அனுப்பி வருகின்றனர். தரமான நூல் தந்தால் தான் வேட்டி, சேலை தயாரிக்க முடியும் என நெசவாளர்கள் கூறியுள்ளனர்'' என எடப்பாடி பழனிசாமி விமர்சனத்தை வைத்துள்ளார்.

Advertisment