Its sad pmk Founder Ramadoss Interview

சென்னை கண்ணகி நகரில் ‘விழுதுகள்’ சேவை மையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 25ஆம் தேதி (25.11.2024) திறந்து வைத்தார். இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதானி தமிழகத்திற்கு வந்து முதல்வரை சந்தித்ததாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, “இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் உரிய விளக்கம் அளித்துள்ளார். ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை. அதனால் தினமும் அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார். அதற்கு எல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.” எனப் பதிலளித்திருந்தார்.

Advertisment

முதல்வர் மு.க. ஸ்டாலினின் இந்த பதில், பா.ம.க.வினரைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. அதே சமயம் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அறிக்கை என்பது எங்களுடைய யோசனைகள். அறிக்கை விடுவது எங்களுடைய கடமை. எங்களுடைய உரிமை. அதனால் அறிக்கை விடுகிறோம்.தமிழ்நாடு மக்கள் நலம் பெற வேண்டும். வளர்ச்சி பெற வேண்டும் என்ற காரணத்தால் தான் அறிக்கை விடுக்கின்றோம். அந்த நல்ல யோசனைகளை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். எனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் சென்னையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் முதல்வர் மு.க. ஸ்டாலினின் விமர்சனம் குறித்துப் பேசுகையில், “அவரைப் போல பிரகாச ஞான ஒளி எனக்கு இல்லை தான். அது சாதாரண ஞான ஒளி அல்ல. அரசியல் ஞான ஒளி. நான் என்ன செய்ய முடியும். எனக்கு வருத்தமாக இருக்கிறது” எனக் கூறினார்.