“அறநிலையத்துறையின் மெத்தனத்தாலே நடக்கிறது”- எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

publive-image

சென்னைபழவந்தாங்கல்கங்கை அம்மன் கோவில் பகுதியில் உள்ளதர்மலிங்கேஸ்வரர்கோவிலில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது. சாமி ஊர்வலத்தின் போதுஅருகில் உள்ளமூவரசம்பேட்டையில்உள்ள குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

அப்போது 5 பேர் குளத்தில் மூழ்கினர்.நீரில்மூழ்கியவர்களைதேடும் பணி நடைபெற்ற நிலையில் 5 பேரும்சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.பழவந்தாங்கல்போலீசார்சம்பவஇடத்திற்குசென்று விசாரணை மேற்கொண்டதோடு உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சாமி ஊர்வலத்தின் போது நிகழ்ந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

publive-image

இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனதுட்விட்டர்பதிவில், “சென்னைநங்கநல்லூரில்உள்ளதர்மலிங்கேஸ்வரர்கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்தவருத்தமுற்றேன். அறநிலையத் துறையின் அலட்சியத்தாலும் மெத்தனத்தாலுமே இத்தகைய அசம்பாவிதங்கள் கோவில் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடைபெறுகிறது.

உயிரிழந்த 5 அர்ச்சகர்களுமே 15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளவயதினர் என்பது மேலும் வருந்தத்தக்கது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க மிகுந்த கவனத்துடன் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

admk
இதையும் படியுங்கள்
Subscribe