Advertisment

''மூன்று நாட்கள் ஆகிறது ஏன் மோடி இன்னும் வாய் திறக்கவில்லை''-திமுக ராஜீவ் காந்தி கேள்வி

publive-image

கோவை கார் வெடிப்பு தொடர்பாக, பல்வேறு கருத்துக்களை தெரிவித்துவந்த பாஜக தலைவர்அண்ணாமலைக்கு தமிழக காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், 'உண்மை இல்லாத, மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும்' அண்ணாமலை பரப்புவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாத சம்பவங்கள் தமிழகத்தில் நிகழாமல் இருக்க சமரசமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழனின் பெருமையை கர்நாடகாவில் நிலைநாட்டி விட்டு வந்துள்ளேன். ஜமேசா முபீன் பற்றிய தகவல்கள் காவல்துறை தலைமைக்கு காவல்துறையில் இயங்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கியுள்ளது.

Advertisment

publive-image

ஜமேசா முபீன் வைத்திருந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பற்றி குறிப்பிட்டிருந்தோம். அதை காவல்துறை மறுக்க முடியுமா? ஜமேசா முபீனை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வராமல் கோட்டை விட்டுள்ளது தமிழக காவல்துறை. கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு முன்பே ஜமேசா முபீன் குறித்து மத்திய உள்துறையின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் அண்ணாமலையின் அறிக்கை தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''தினந்தோறும் தனக்கு அறிக்கையை வேண்டும் என்ற முறையில் தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக தினமும் அறிக்கை விட்டுக்கொண்டு ஒரு கோமாளித்தனமான நடவடிக்கையில் அண்ணாமலை இறங்கி இருக்கிறார். கார் வெடிப்பில் அண்ணாமலை அரசியல் செய்கிறார். இன்று மதியம் வந்த அறிக்கை காவல்துறையை களங்கப்படுத்துவதாகவும், காவல்துறையை கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது.

கோவையில்23ஆம் தேதி காலை நான்கு மணிக்கு விபத்து நடந்ததாக சொல்லப்படும் போது முதலில் போய் அந்த எரிந்த காரை கைப்பற்றிய காவல்துறை நண்பர் அவர் எந்த ஜாதி, எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது யாருக்குமே தெரியாது. உள்ளே வெடிகுண்டு இருக்கிறதா என்பது கூட தெரியாது. தன்னுடைய உயிரை பணயம் வைத்து தன்னுடைய காவல்துறை வேலையைசெய்த காவல் அதிகாரிகளை இந்த சாதி, இந்த மதம், அதனால் சரியில்லை என்ற உளறல்களை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார். உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் பாபர் மசூதி இடிப்புக்கு பின்பு கோவை பகுதி மத அடிப்படைவாதிகளுடைய ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளான பின்பு ஒரு அரசியல் கட்சியாக ஒரு சம்பவம் நடந்தால் அந்த மக்களிடம் போய் விளக்க வேண்டியதும், மக்கள் சமூக நல்லிணக்கம் பெற இணக்கமான சூழலை கொண்டு வருவதுதான் அரசியல் கட்சியின் வேலை. அதற்கு மாறாக கோமாளித்தனமாக பந்த் நடத்துகிறோம், யாரும் தொழில் செய்யாதீர்கள், கடையை திறக்காதீர்கள் என்றால், இன்னைக்கு இருக்கக்கூடிய சூழலில் சென்னைக்கு அடுத்து வளர்ந்து வரக்கூடிய தொழில் நகரமான கோவையில் இனிமேல் யாரும் தொழில் செய்யாதீர்கள் என்பதைபோல் கோவையை எப்போதும் தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக பதற்றமாக வைத்திருக்கக்கூடிய அண்ணாமலை போன்ற அரசியல் அனுபவம் இல்லாதவர்களுடைய செயல் மிகவும் வெட்கக்கேடான செயல்.

publive-image

ஏழு நாள் ஏழு நாட்கள் ஆகிவிட்டது முதல்வர் ஏன் பேசவில்லை என அண்ணாமலை கேட்கிறார். 27 ஆம் தேதி மாலையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஒரு பேச்சுக்கு கூறினால் கூட மோடி ஏன் இந்த வழக்கு இன்னும் குறித்து பேசவில்லை. இப்படி நான் கேள்வி கேட்டால் இது எப்படி முட்டாள்தனமான வாதமாக இருக்கும். மாநில அரசு பேசவில்லை என்று அண்ணாமலை சொல்கிறார். பரவாயில்லை மாநில அரசு பேசாமல் இருந்ததாகவே போகட்டும். சம்பவம் நடந்த மறுநாளே முதல்வர் இரு காவல்துறை அதிகாரிகளை கூப்பிட்டு நேரடியாக போகச் சொல்கிறார். பிறகு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்படுகிறது. மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமையும் இந்த வழக்கை நடத்துகிறது. ஒப்படைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகின்றது. ஆனால் பிரதமர் மோடிஇதுவரை ஏன் பேசவில்லை என்ற கேள்வி கேட்டால் எப்படி பால்வாடித்தனமாக இருக்குமோ அது போன்ற பால்வாடித்தனமான அரசியலைத் தான் அண்ணாமலை செய்து கொண்டு வருகிறார்'' என்றார்.

Annamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe