ttv-senthil

Advertisment

முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யார் வருந்தப் போகிறார்கள்? ஆலவிருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சமே இல்லாமல் போய்விடுமா? என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

செந்தில்பாலாஜி அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலையடுத்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

துரோகிகளும், விரோதிகளும் அமமுகவின் வளர்ச்சியை தடுக்க முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அமமுகவின் எழுச்சியைத் தடுத்து, வளச்சியை முடக்கும் செயலில் சிலர் தீவிரமாக செயல்படுகின்றனர். ஒரு சிறு குழு விலகிச் செல்வதால் அமமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யார் வருந்தப் போகிறார்கள்? ஆலவிருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சமே இல்லாமல் போய்விடுமா? என்று கூறியுள்ளார்.