Skip to main content

தாய்க்கழகம் திரும்பும் முன்னாள் எம்.எல்.ஏ.! வருமான வரி சோதனை ஏவிய ஆளும் கட்சி!

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

கடந்த 2006 - 2011ஆம் ஆண்டுகளில் கடலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏவாக இருந்தவர் கோ.ஐயப்பன். இவர் 2011 சட்டமன்றத் தேர்தலில் தமக்கு சீட் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் தி.மு.க.வில் இருந்து வெளியேறி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.  2011 சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய அமைச்சர் எம்.சி.சம்பத்திற்காக தீவிரமாக தேர்தல் வேலை செய்தார். அதையடுத்து எம்.சி.சம்பத்தின் சிபாரிசின் பேரில்  அ.தி.மு.கவில் மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.  

 

IT raid in Former MLA aiyapan

 

2016 சட்டமன்றத் தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார்.  ஆனால், 2016 தேர்தலில் எம்.சி.சம்பத்தே மீண்டும் போட்டியிட்டதால் அதிருப்தியில் இருந்தார்.  அதன் பின்னர் சம்பத்தோடு மோதல் போக்கில் இருந்து வந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ்-ன் ஆதரவாளராக ஐயப்பன் இயங்கி வந்தார்.  ஓபிஎஸ் - இபிஎஸ் இணைப்பிற்கு பிறகு கட்சியில் தனக்கு எவ்வித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை என்பதால் அதிருப்தியில் இருந்தார். 
 


இந்நிலையில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க.விற்கு கொடுக்கப்பட்டதையடுத்து பாமக வேட்பாளர் கோவிந்தசாமி, ஐயப்பனிடம் நேரில் சென்று தமக்கு ஆதரவாக பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.  ஆனால் ஐயப்பனின் வருகையை அமைச்சர் எம்.சி.சம்பத் விரும்பவில்லை. மேலும் வேட்பாளர் கோவிந்தசாமியும் ஐயப்பனுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என நினைத்தார்.  இந்நிலையில் தேர்தல் பணியாற்ற தனக்கு ஆர்வம் இருந்தாலும் அமைச்சரின் கெடுபிடியால் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு பணியாற்ற முடியவில்லை என்கிற வருத்தத்தில் இருந்தார் ஐயப்பன். வருகிற 11-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு வரும் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் திமுகவில் சேர உள்ளார்.

 

IT raid in Former MLA aiyapan

 

இந்நிலையில் இன்று காலை வருமானவரி துறையினரும்,  தேர்தல் பறக்கும் படையினரும் ஐயப்பன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.  மேலும் அவரது ஆதரவாளர் பிரகாஷ் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
 

இதனை தொடர்ந்து ஐயப்பன், தான் கட்சி மாறப் போவது அறிந்து,  தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலேயே சிலரின் தூண்டுதலால் இந்த சோதனை நடைபெற்றதாகவும் சோதனையில் எதையும் அதிகாரிகள் கைபற்றவில்லை என்றும் தன்னுடைய அரசியல் எதிரிகள் தன்னை களங்கப்படுத்த நினைப்பதாகவும் ஐயப்பன் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாஜி எம்.எல்.ஏவின் சகோதரி வீட்டிலும் ரெய்டு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
 AIADMK ex-MLA's sister's house also raided

அண்மையாக சில மாதங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி இருந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோரது இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நேற்று முன்தினம் அதிமுக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது டெண்டர் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், இந்த சோதனை நடைபெற்று முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குற்றத்தில் தொடர்புடைய ஆவணங்கள், நில மற்றும் சொத்து ஆவணங்கள் 47 கைப்பற்றப்பட்டன. அவற்றின் சொத்து மதிப்பு ரூ.15 கோடியே 64 லட்சத்து 32 ஆயிரத்து 237 என தெரியவந்தது.

 AIADMK ex-MLA's sister's house also raided

இந்நிலையில், இன்று காலை முதல் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவான பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏவாக இருந்த பிரபு மற்றும் அவரது தந்தை ஐயப்பா ஆகியோருக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. தியாகதுருகத்தில் உள்ள பிரபு வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வின் வீட்டில் நடைபெறும் சோதனையின் தொடர்ச்சியாக விழுப்புரத்தில் உள்ள பிரபுவின் சகோதரி வசந்தி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது. பிற்பகலுக்கு பின்னர் சோதனையின் முடிவு வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story

ரெய்டில் சிக்கிய மற்றொரு மாஜி எம்.எல்.ஏ; 7 இடங்களில் சோதனை

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
nn

அண்மையாக சில மாதங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி இருந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோரது இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நேற்று முன்தினம் அதிமுக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது டெண்டர் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், இந்த சோதனை நடைபெற்று முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குற்றத்தில் தொடர்புடைய ஆவணங்கள், நில மற்றும் சொத்து ஆவணங்கள் 47 கைப்பற்றப்பட்டன. அவற்றின் சொத்து மதிப்பு ரூ.15 கோடியே 64 லட்சத்து 32 ஆயிரத்து 237 என தெரியவந்தது.

Anti-corruption department raids the house of another AIADMK former MLA

இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவான பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏவாக இருந்த பிரபு மற்றும் அவரது தந்தை ஐயப்பா ஆகியோருக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.