Advertisment

“ஐ.டி. ரெய்டு எல்லாம் எம்மாத்திரம்” - உதயநிதி ஸ்டாலின்

“IT Raid is all about us” - Udayanidhi Stalin

“மிசாவை பார்த்த இயக்கம் தான் திமுக. இந்த ஐ.டி. ரெய்டு எல்லாம் எம்மாத்திரம்” என ஈரோட்டில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisment

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அபார வெற்றி பெற்றார். இந்நிலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு வந்தார். அவருக்கு ஈரோடு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஈரோட்டில் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூட என்னிடம் கேட்டனர். நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஐ.டி. ரெய்டு நடத்துகிறார்களே. உங்களை அச்சுறுத்துகிறார்களா எனக் கேட்டனர். திமுக காரர்களை யாராலும் அச்சுறுத்த முடியாது. மிசாவை பார்த்த இயக்கம் தான் திமுக. இந்த ஐ.டி. ரெய்டு எல்லாம் எம்மாத்திரம் என நான் சொன்னேன்.

நீங்கள் என்ன வேண்டுமானாலும் நடவடிக்கை எடுங்கள் பார்த்துக் கொள்ளலாம். இந்த ஐ.டி. ரெய்டுகள் என்ன புதிதா. திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து எப்படி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தீர்களோ, அதுபோல் நாடாளுமன்றத்தேர்தலிலும் கொடுக்க வேண்டும். பாசிச பாஜக அரசின் அடிமைகளை சென்ற சட்டமன்றத்தேர்தலில் வீட்டிற்கு அனுப்பினீர்கள். அதுபோல் பாசிச பாஜகவையும் வீட்டிற்கு அனுப்பும் நேரம் வெகு விரைவில் வந்து கொண்டுள்ளது” எனக் கூறினார்.

Advertisment

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe