Nirmal Kumar left BJP and joined AIADMK

தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல்குமார் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.

Advertisment

தமிழக பாஜகவின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகிக் கொள்வதாக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''உண்மையாக நேர்மையாக உழைத்தேன். வேதனை மட்டுமே மிச்சம். என்னால் முடிந்தவரை பல சங்கடங்களைக் கடந்து ஒன்றரை ஆண்டுகளாக பயணித்தேன். தொண்டர்கள், கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும். மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள யதார்த்தத்தை என்றும் உணர முடியாது. ஒரு அமைச்சரை பற்றி வெளியே விமர்சித்து விட்டு பேரம்பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்'' என தெரிவித்துள்ளார்.பாஜகவிலிருந்து விலகி அதிமுகவின் இபிஎஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் நிர்மல் குமார்.