Advertisment

“பணம் வாங்கியதாகச் சொல்வது பொய்... உண்மையானால் திருப்பி தரச் சொல்கிறேன்” - ஆளுநர் தமிழிசை ஆவேசம்

“It is a lie to say that money was bought; If it's true, I'll tell you to return it

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின்ஜிப்மர்மருத்துவமனையில் 63 வகை உயர்சிகிச்சைக்குக்கட்டணம் வசூலிக்கும்சுற்றறிக்கையைத்திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்திவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisment

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசைசவுந்தரராஜன், “ஜிப்மர்புதுச்சேரி மக்களுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் முழுமையானசேவையை ஆற்றுகிறது. வெளி மாநிலங்கள் வெளி நாடுகளுக்குச் சென்றுபெறும் சிகிச்சையை மிகச்சிறந்த மருத்துவர்கள் அளித்து வருகிறார்கள்.கொரோனாநேரத்தில் அவர்கள் அளித்த சிகிச்சையை யாரும் மறுக்க முடியாது. 70% மக்கள்தமிழகத்தில் இருந்துதான்சேவை செய்கிறார்கள். குறைசொல்ல முடியாத அளவிற்கு மக்கள்அங்குபணி செய்கிறார்கள். ஆனால் அங்கு ஆர்ப்பாட்டம் செய்து பொதுமக்களுக்கும் அங்கு வரும் நோயாளிகளுக்கும் இடையூறு செய்வதுகடுமையாகக்கண்டிக்கக்கூடியது.

Advertisment

ஏழைமக்களுக்குகட்டணம் கிடையாது. சென்னை, பெங்களூர், மும்பை போன்ற வெளி மாநிலங்களுக்குச் சென்று மேற்கொள்ளும் பரிசோதனைகள் அனைத்தும்இன்று ஒரு கூரையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.இதைப்பாராட்டுங்கள்.மும்பைக்குபரிசோதனைக்காக அனுப்பி வைத்தால்,பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் கொண்டு வர ஏறத்தாழ 10 ஆயிரம் ஆகும். ஏழை மக்களுக்கு அதற்குண்டான பணம் வாங்கப்படுவதில்லை. தரமுடியும் என்ற இடத்தில் இருக்கும் மக்களிடம் மட்டும் தான் பணம் வாங்கப்படுகிறது. ஏழை மக்களிடம் பணம்வாங்கியதாகச்சொல்லப்படுவது பொய்யான செய்தி. அப்படி உண்மையாக இருந்தால் என்னிடம் சொல்லச் சொல்லுங்கள் நான் திருப்பித்தரச் சொல்கிறேன்.

தமிழ்நாட்டில் வேலை இல்லை என்று புதுச்சேரியில் போராட்டம் நடத்துகிறார்கள். முதலில்எம்.பிக்களைஅவர்களது சொந்த ஊர்களில் இருக்கச் சொல்லுங்கள். விழுப்புரம்எம்.பி. ஏன் இங்கு இருக்கிறார். அவருக்கு முகவரி என்ன புதுச்சேரியா?ஜிப்மர்மிக நன்றாக நடந்துகொண்டுள்ளது. என்ன பிரச்சனை என்றாலும் உடனடியாக இயக்குநரை நான் தொடர்பு கொள்கிறேன். குறை இருந்தால் சொல்லுங்கள்.அதைச்சரி செய்யலாம். ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. ஆர்ப்பாட்டம் செய்யும்வேலையைதமிழ்நாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்” எனக் கூறினார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe