திமுக ஆட்சியில் வேதனை தரும்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயலிழந்து நிற்பதாக தமிழக எதிர்க்கட்சி துணைத்தலைவர்ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தரவேண்டிய ரூபாய் 2,000 கோடியை பெறமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசிடம் நெல் அரவை நிலுவைத்தொகையைப்பெறநுகர்பொருள் வாணிபக் கழகம் துரிதமாக செயல்படவில்லை. அக்டோபர் மாதம் தொடங்கும் சீசனில்நெல் கொள்முதல்அதிகரிக்க திமுக அரசு முயல வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்கள் நெல் கொள்முதலுக்கு ஏற்றவாறு அதிகரிக்கப்படவில்லை என்பதேஉண்மை. நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி துரித கதியில் செயல்பட வைக்க வேண்டும்'' எனக்கூறியுள்ளார்.