தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் பிரச்சாரம்,கூட்டணி என பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று (26/2/2021) சட்டமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், வாக்கெடுப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான தேதிகள்அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறைகளும் அமலுக்குவந்தது. தற்பொழுது அரசியல் கட்சிகள் கூட்டணிக்கானதொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளைதீவிரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
இன்று (27/2/2021) மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசியகமல்ஹாசன் ''இன்னும் நிறைய நாட்கள்இருக்கிறது என்று நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு.. அது இல்லை என்பதுஅறிவிப்பின் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது. இன்னும் 36 நாட்களே இருக்கிறது. அதற்கு முன்பேநாங்கள் ஆயத்தமாக இருந்ததால்அடுத்தகட்டவேளைகளில் இறங்கியுள்ளோம். மூத்த அரசியலாளர் பழ.கருப்பையாமக்கள் நீதி மய்யத்தில் இணைகிறார். மக்கள் நீதி மய்யம்சார்பாக போட்டியிடவும் அவர் சம்மதித்திருக்கிறார்'' என்றார். அதேபோல்சட்டபஞ்சயாத்து இயக்கம் இந்தமுறை மக்கள் நீதி மய்யத்துடன் சேர்ந்துபயணிக்கும்எனவும் கமல்ஹாசன் அறிவித்தார்.